Tamil

ஞாயிறு, 17 ஜூலை, 2016

என்னடா செய்வாய்?


ஆழநீர் நாட்டுக் குள்ளே
       அதிரடி ஆட்டம் போடும்
ஏழடிப் பச்சைப் பாம்பே! 
       என்னடா செய்வாய், என்னை?..
நீலவான் நாட்டுக் குள்நான்
       நிரந்தர வேட்டைக் காரன்..
வாலைநீ சுழற்ற வேண்டாம்:
       வந்தி(டு)என் கூடே மேலே!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக