Tamil

ஞாயிறு, 17 ஜூலை, 2016

மே 18





தென்னிலங்கைத் தமிழுறவின் தியாக தீபம்..
என்னிதயத்(து) ஏழாண்டாய் எரியும் தீபம்..
கண்ணிழந்த கயவர்களைக் காட்டும் தீபம்..
தன்இனத்தைத் தமிழன்நினை வூட்டும் தீபம்!!..

சிங்களத்துக் கழுகுகளின் செந்நீர்த் தாகம்
நம்குலத்தை மேய்ந்ததனை நவிலும் தீபம்..
வெங்களத்தில் விதையான வெற்றித் தூண்கள்
தங்களது தனித்துவத்தைத் தாங்கும் தீபம்!!..

இந்தியனின் வஞ்சகத்தை இயம்பும் தீபம்..
சிந்தியசெங் குருதியுடன் சிரிக்கும் தீபம்.
நம்தினவுத் தோள்களுடன் நடக்கும் தீபம்..
வெந்திடினும் வெஞ்சினத்தை விளக்கும் தீபம்!!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக