Tamil

சனி, 16 ஜூலை, 2016

பதனீர்




எல்லையில் லாத கோடை
          எரிவெயில் கொடுமை தீர்க்க, 
 நல்லபச் சோலைப் பட்டை
          நான்பெறப் பதனீ ரோடு 
சொல்லரும் நுங்கும் சேர்த்துச்
          சுவைத்திடத் தந்த என்றன்
நெல்லைநண் 'பனை'க்கண் டேன்:என்
          நெஞ்சுபச் 'சோலை' இன்னும்!..

(அறுசீர் விருத்தம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக