கும்மியடி பெண்ணே கும்மியடி - இது
கும்பிடும் கையென்று கும்மியடி..
நம்மிடையே வந்து கண்ட கதை சொல்லும்
நாடக முத்திரை.. கும்மியடி!..
தேர்தல் வந்ததடி கும்மியடி - இந்த
தேசம் வெந்ததடி கும்மியடி..
ஆர்முன்னும் அச்சமின்றிப் பிச்சை எடுக்கும்
அன்புச் சின்னம் இது, கும்மியடி!..
வாக்குறுதி தரும், கைகளடி - நம்மை
வணங்கிடும் வேஷக் கைகளடி..
வாக்கு கிடைத்ததும் மறந்து போகும்தம்
வார்த்தைகளை, என்று கும்மியடி!..
ஆறு முனைகளில் தேர்தலடி - இங்(கு)
அனைவர்க்கும் நாற்காலிக் காதலடி..
சோறு போடுபவன் யாரென்று காணாது
சொல்வதென்ன என்று கும்மியடி!..
நல்லவனைக் கண்டு கும்பிடடி - அவன்
நாடாளட்டும் என்று கும்மியடி..
வெல்லுபவன் இனி ஊழலின்றி ஆள
வேண்டும் என்று சொல்லி கும்மியடி!!...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக