Tamil

சனி, 16 ஜூலை, 2016

கொப்பரைத் தேங்காய்

(அறுசீர் விருத்தம்)


கொள்ளைவ னப்புப் பூண்ட
          கொப்பரைத் தேங்காய் ஒன்றைச்
செல்லமாய் நார்உ ரித்துச்
         சிரட்டையின் மேல்பி ளந்து, 
வெள்ளையாய் விடலைத் தேங்காய் 
        வெளியிலே தெரிய, உள்ளே
தெள்ளிய இளநீர் கண்டேன்..
           தீர்ந்தது கவிதைத் தாகம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக