Tamil

ஞாயிறு, 17 ஜூலை, 2016

நெடும் பனை!..



சோ(று)இடும் வயல்கள் சூழ்ந்து 
      சுற்றமாய் உறவு கொள்ள, 
வேறிடம் எங்கும் காணா
      வெள்ளநீர் விருந்து செய்ய,
"ஆரிடம் உள(து)என் னைப்போல்
      அதிர்ஷ்டம்?"என்(று) அகம்பூ ரித்துக்
கூறிடும் நெடும்ப னைக்குக்
      கொடுக்கலாம் முதல்வ ணக்கம்!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக