.பாரதி தாசன் - "சுடர்தந்த தேன்!"
"சுடர்தந்த தேன்!"என்று தமிழைச் சொன்ன சுப்புரத்னம் நினைவுண்டோ? சொல்லாய், தோழா!.. மிடல்சான்ற கவிமறவன் அவன்போல் இந்த மேதினியில் ஒருவனுண்டோ? உரைப்பாய் தோழா!..
"உடனேநீ விழி,தமிழா!" எனும்போர்ப் பாட்டை
உரக்கமுழங் கியபுதுவைக் குயிலின் ஓசை,
மடத்தமிழன் காதுகளின் மடலை இன்னும்
மருவவில்லை: இதுவென்ன மாயம், தோழா?.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக