Tamil

சனி, 16 ஜூலை, 2016

பாடம் நடத்தும் செம்மறிகள்!..

ஆயன் போவதோ முன்னால் - அவன்
ஆடுகள் செல்லும் பின்னால்...
ஆயனோ ஒருசொல் சொன்னால் - அதை 
ஆடுகள் கேட்கும் தன்னால்!.. 

பனித்துகள் படர்ந்த வழியில் - தங்கள்
பயணமும் தொடர்ந்த நிலையில்..
பணிவுடன் நடக்கும் கலையில் - ஒரு
பாடம் நடத்தும் செம்மறிகள்!..

தலைவனைத் தொடர்ந்து செல்லும் - அணி
தரணியை முனைந்து வெல்லும்..
தலைவனைப் பிரிந்த உள்ளம் - எந்தத்
தருணமும் தனித்துச் செல்லும்!..

ஆடுகள் செல்லும் பாதை - இன்று
அரசியல் உலகில் தேவை..
ஆளுக்கொரு திசையில் பார்வை - எனில்
அடைய முடியாது தீர்வை!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக