
ஒய்யார நன்னடையும், அடுக்க டுக்காய்
உச்சியின்மேல் பன்னிரண்டு கலமும் தாங்கி..
மெய்யார வேர்த்தபடி நடந்து செல்லும்
மெல்லிடையீர்! ஒருநிமிடம் நில்மின்! நீவிர்
கையாரப் பிடிக்காமல் கலங்கள் வீழாக்
கலையறிந்த தாயெண்ணிக் கர்வம் கொள்ளேல்:
பொய்யாரப் பலகலன்கள் பூட்டிக் காட்டும்
' பொன்னார்'என் றொருவர்இதோ புறப்பட் டுள்ளார்!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக