"துறைவன்" புத்தகத்திற்கான நான் எழுதிய நேர்மை விமர்சனம் வாசிக்க கீழ்கண்ட இந்த இணைப்பைச் சொடுக்குக.
https://drive.google.com/file/d/0B6YbS1lfcU0UM180MUVyQVJkQVU/view?usp=sharing
இந்த விமர்சனத்திற்கு நாவலாசிரியர் ஆண்டனி எமக்கு எழுதிய பதிலை அப்படியே படிக்க கீழ்கண்ட சுட்டியைச் சொடுக்குக.
http://christopherantony.in/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF/
(இந்த பக்கத்தில் உள்ளவைகளை எதிர்காலத்தில் காணமல் போக வாய்ப்பு உண்டாகும் என்று கருதுவதால் அதை அப்படியே இங்கு பதிவும் இடுகிறேன்)
https://drive.google.com/file/d/0B6YbS1lfcU0UM180MUVyQVJkQVU/view?usp=sharing
இந்த விமர்சனத்திற்கு நாவலாசிரியர் ஆண்டனி எமக்கு எழுதிய பதிலை அப்படியே படிக்க கீழ்கண்ட சுட்டியைச் சொடுக்குக.
http://christopherantony.in/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF/
(இந்த பக்கத்தில் உள்ளவைகளை எதிர்காலத்தில் காணமல் போக வாய்ப்பு உண்டாகும் என்று கருதுவதால் அதை அப்படியே இங்கு பதிவும் இடுகிறேன்)
பள்ளம்துறை தொ. சூசைமிக்கேல் அவர்கள் துறைவனுக்கு எழுதிய மிக நேர்மையான விமர்சனம். இவர் ஒரு நெய்தல் படைப்பாளி என்பதால் இந்த விமர்சனத்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் கருதுகின்றேன். மிகவும் விரிவாக அலசியிருக்கின்றார்.
பொதுவாக இலக்கிய ஆக்கங்களுக்கு வரும் விமர்சனதிற்கு பதில் கொடுக்கவேண்டிய தேவையில்லாதிருப்பினும், எழுதுகின்றவர்களின் தகுதி, அவர்கள் இதற்காக செலவழித்த நேரம், விமர்சனத்தின் முக்கியத்துவம், ஆகியவற்றை கருத்தில்கொண்டு, இலக்கிய ஆக்கங்களில் வாசக இடைவெளி இருப்பினும், அந்த விமர்சனங்கள் புதிய வாசகரை தவறான வாசிப்பிற்கு கொண்டுசெல்லும் வலிமை இருப்பதாலும், நல்ல முடிவிற்கு வந்த வாசகர்கள் இந்த விமர்சனத்தை வாசித்துவிட்டு படைப்பாளி தன்னை ஏமாற்றிவிட்டான் என்னும் முடிவுக்கு வர காரணமாக இருப்பதாலும், இந்த விமர்சனத்தின் நோக்கம் எதிர்மறையாக இருப்பதாலும், தொ. சூசைமிக்கேல் அவர்களுக்கு நான் ஒரு “முழுமையடையாத” படைப்பாளியாக இருந்தாலும் என்னளவில் ஒரு சிறிய பதிலை அவருக்கு கொடுப்பதை என்னுடைய கடமையாகவே நினைக்கின்றேன்.
இந்த விமர்சனம் ஒருவர் எழுதியதுபோல் தெரியவில்லை. இரண்டு மூன்று படைப்பாளிகள் சேர்ந்து எழுதியது. இரண்டு மூன்று மாதங்கள் துறைவனை ஊன்றிப்படித்து இந்த விமர்சனத்தை எழுதியிருக்கின்றார்கள். இதை புத்தகமாக அச்சிட்டு கடற்கரை பொதுமக்களுக்கு வினியோகிக்க இருப்பதாகவும் அறிந்தேன். அதில் தவறில்லை. காலம் தாமதிக்காமல் அவ்வாறு செய்ய நான் அவர்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இது ஒரு மிகவும் முக்கியமான அலசல். ஆனால் அதை தவறான நோக்கத்தோடு, பொய்ப்பிரச்சாரத்திற்காக எழுதியிருப்பதை அறியும்போது மனம் சில்லிடுகின்றது.
துறைவன் நாவலை 2014 மே மாதத்தில் எழுதி முடித்தேன். துறைவனை வெளியிடுவதற்காக பலரை தொடர்புகொண்டும் முடியாமல் போனது. 2015 ஆகஸ்டு மாதம் குறும்பனை பெர்லினின் தொடர்பு கிடைத்தபிறகு துறைவன் விரைவில் வெளிவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். 2015 நவம்பர் மாதம் முக்கடல் பதிப்பகம் துறைவனை வெளியிட்டது.
நான் துறைவனை எழுதி முடித்ததும் மூன்று பேரிடம் அணிந்துரை எழுதிக்கேட்க நினைத்தேன். அவர்கள் மூவரும் எழுதியிருக்கின்றார்கள். துறைவன் வெளியீட்டுவிழாவிலும் அவர்கள் மூவரும் கலந்துகொண்டார்கள். என் வாழ்க்கையில் நான் மகிழ்சியடைந்த தருணங்களில் அதுவும் ஒன்று.
தூவார்தே பர்போசாவால் என் மனம் புண்பட்டதால்தான் நான் துறைவன் நாவலை எழுதினேன். ஆனால் துறைவனால் உங்களின் மனம் புண்பட்டதாகச்சொல்வதில் வியப்பொன்றுமில்லை.
நான் துறைவனை ஏன் எழுதினேன் என்பற்கான காரணங்களை பதாகை இலக்கிய இதழ் நடத்திய நேர்காணலில் பதிவு செய்திருக்கின்றேன். இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
திரு. தொ. சூசைமிக்கேல் கொடுத்திருக்கும் தலைப்புகளை இங்கே குறிப்பிட்டு என்னுடைய பதிலையும் தருகின்றேன். முதலில் சூசைமிக்கேலின் விமரிசனத்தை படித்தால்தான் பின்வரும் எனது பதில் புரியும்.
1. பிழைகள் பொருட்படுத்தப்பட வேண்டியவையே:
ஒற்றுப்பிழைகளும், இலக்கணப்பிழைகளும், பன்மை வினைமுற்றுகளும் பொருட்படுத்தவேண்டியவையே அல்ல. நான் எப்படி சிந்திக்கின்றோனோ அப்படித்தான் நான் எழுதமுடியும். இலக்கணம் படித்து நான் தமிழ் எழுத நானென்ன பள்ளி கல்லூரிக்கு இலக்கணபுத்தகமா எழுதுகின்றேன். செப்பனிடலாம் ஆனால் அது எழுத்தாளனின் வேலையல்ல. அதில் வரும் உகரமும் ஒகரமும் நான்பேசுவதும், சிந்திப்பதும். நான் “உள்ளதா?” என்று கேட்பேனே தவிர “ஒள்ளதா?” என்று கோணலாக கேட்கமாட்டேன்.
2. திருப்தியற்ற சில பகுதிகள்:
நான் எழுதும்போது எந்த வார்த்தைகள் என்கைகளுக்கு கிடைக்கின்றதோ அதைத்தான் நான் எழுதமுடியும். எங்கள் ஊரில் பயன்பாட்டில் இல்லாத உரி என்னும் சொல்லை நான் எப்படி பயன்படுத்தியிருக்கமுடியும்? போத்திப்பிள்ளை என்னும் பெயரில் உங்களுக்கு திருப்தியில்லையா? ஆப்படியென்றால் வாள்ளவிளையிலிருக்கும் போத்திபிள்ளையை நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்?
நான் தொகுத்த நெய்தல் கலைச்சொற்களின் இணைப்பை கீழே தருகின்றேன்.
3. துறைவனுக்கு முன்னுரை எழுதிய மூவர்:
நான் கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்தின் அரசியலையும் தமிழ் இலக்கியவாதிகளின் குஸ்திகளையும் வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கின்றேன். எனவே துறைவனுக்கு ஜெயமோகன் அணிந்துரை எழுதினால் யாரெல்லாம் துறைவனை தீண்டத்தகாததாகப்பார்ப்பார்கள் என்பதும், ஜோ டி’குரூஸ் ஒரு மீனவனாக இருந்தாலும் ஒரு பெரும் நெய்தல் படைப்பாளியாக இருந்தாலும் அவர் துறைவனுக்கு அணிதுரை எழுதினால் யாரெல்லாம் துறைவனுக்கு ஹிந்துத்வா முத்திரைகுத்தி விலக்குவார்கள் என்பதும், பாதர் பங்கிராஸ் அணிந்துரை எழுதினால் யாரெல்லாம் துறைவனை கிறிஸ்தவ மதச்சாயம் பூசி ஒதுக்குவார்கள் என்பதும் எனக்குத்தெரியாமலில்லை.
மற்ற இருவரையும் விட்டுவிட்டு தொ. சூசைமிக்கேல் சாடுவது அவரது தனிப்பட்ட காழ்ப்பு மட்டுமே. அதற்கு துறைவனை பயன்படுத்துகின்றார்.
மூவரின் மதிப்புரைகளும் எனக்கு அனுப்பப்பட்டு நான் சரிபார்த்து திருத்தம் செய்தபின்னர்தான் அவற்றை நான் பதிப்பாளருக்கு அனுப்பிவைத்தேன். எனவே யாருக்காவது துறைவனிலிருக்கும் மூன்று மதிப்புரைகளில் எதிலாவது விமர்சனமிருந்தால் என்மீதுதான் வைக்கவேண்டும்.
இவர்கள் மூவரும் என்னுடைய வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகள். உங்கள் விரல்கள் விருந்தாளியை நோக்கியல்ல, என்னை நோக்கி மட்டுமே சுட்டவேண்டும். அதுவே எழுத்து தர்மம்.
நீங்கள் மதிப்புரை மீதுவைக்கும் குற்றச்சாட்டுகளில் முதல் குற்றச்சாட்டில் நியாயம் இல்லையென்பதால் இரண்டாவது குற்றச்சாட்டு மதிப்பிழந்துவிடுகின்றது.
இருப்பினும் முதலாவது குற்றச்சாட்டிற்கான பதில் : உங்களின் தகவலுக்கு நன்றி. செண்பகராமன் பள்ளு ஆசிரியரின் பெயரை முதலில் ஜஸ்டின் திவாகரிடம் சொல்லித் திருத்துங்கள்.
இரண்டாவது குற்றச்சாட்டிற்கான பதில்: புனித சவேரியாரால் மதமாற்றம் செய்யப்பட்டதிலிருந்து மார்த்தாண்ட வர்மா அரியணை ஏறியதற்கும் இடைப்பட்ட காலத்தில் கேரளக்கடற்கரை மீனவர்கள் யாரின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தார்கள்?
4. துறைவனின் சொல்விளக்கம்:
“துறைவனும் பரதவனும் இனப்பெயரு கெடயாது” என்று நாவலில் வருவது சரியானது. இனமென்றால் திராவிடம் ஆரியம் என்னும் பொருள்பட இங்கே சுட்டப்படுகின்றது.
துறைவன் கடைசி அத்தாயத்தின் தலைப்பாகவும் விசைப்படகின் பெயராகவும் மட்டுமே வருகின்றது என்று சொல்கின்றீர்கள். துறைவனின் அனைத்து அதிகாரங்களின் தலைப்புகளும் குறியீடுகள்.
உதாரணமாக,
“கடற்குதிரை” – ஆண் கடற்குதிரை இனப்பெருக்கம் செய்யும். அதில் தாசையா “புதிய தலைவர்கள் வரட்டும்” என்று சொல்லியிருப்பார்.
அதுபோல் சுங்கான், கடல்பாம்பு, துறைவன். துறைவன் தலைவன் என்னும் பொருள்பட பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. துறைவன் அதிகாரத்தின் முடிவில் யார் தலைவன் என்பதை தெளிவாகவே சொல்லியிருக்கின்றேன்.
கோபத்தின் உச்சியிலிருக்கும் மீனவர்களிடம் துறைவன் குறித்த சங்கப்பாடல்களைச் சொல்லவேண்டுமென்று நான் பெர்மனிடம் எப்படி கேட்கமுடியும்?
5. பரதவனும் முக்குவனும்:
6. முக்குவன் என்பதன் சொல்வரலாறு:
முக்குவன் பெயர் எவ்வாறு உருவானதென்று பெர்மன் அவனது கடைசி கடிதத்தில் சொல்லியிருக்கின்றான். கடிதத்தின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
7. முக்குவனின் பிற பெயர்கள்:
முக்கர ஹத்தனா குறித்து விக்கிபீடியாவில் சொல்லியிருப்பதை மொழிபெயர்த்து தமிழில் சொல்லியிருக்கின்றீர்கள். எனக்கு தெளிவில்லாததை, நான் ஆதாரபூர்வமாக படிக்காததை என்னுடைய நாவலில் நான் எப்படி சொல்லமுடியும்?
முக்கர ஹத்தன 17-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதென்பதும், அந்த நிகழ்வு 15-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்ததென்றும் வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லியிருக்கின்றார்கள். 17-ம் நூற்றாண்டில் முக்குவன் என்னும் பெயர் பரவலாக்கப்பட்டுவிட்டது.
(Crucible of Conflict: Tamil and Muslim Society on the East Coast of Sri Lanka By Dennis B. McGilvray: பக்கம் 61 )
Crucible of Conflict: Tamil and Muslim Society on the East Coast of Sri Lanka: பக்கம் 58
“From the language and the events of which it relates the Mukkara Hatana could not have been written earlier than the second half of seventeenth century.”
The Karāva of Ceylon: Society and Culture, Page 24
The Legal System of Ceylon in Its Historical Setting By Tambyah Nadaraja
“The Mukkaru Hatana (The Mukkara War) a sinhalese work of the second half of the seventeenth century (H. Nevil collection of mss, British Museum Or. 6606(53), trans. M. D Raghavan, The karma of ceylon 1961 pp. 16-18) records the defeat of Mukkuvans encamped at Puttalam by south indian mercenaries of Prahrama Bahu VI, king of Kotte (1412-62)”
8. முக்குவக் குடியின் உட்பிரிவுகள்:
காந்தளூர் சாலை குறித்த சோழனின் எந்த கல்வெட்டில் அல்லது செப்பேட்டில் முக்குவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது?
9. அரையர் என்னும் முக்குவர்:
பெர்மனின் கடைசி கடிதத்தை படிக்கவும்.
10. இலக்கியத்தில் ‘முக்குவன்’ இருக்கின்றானா?
அவன் இலக்கியத்திலும் இல்லை. நிகண்டுவிலும் இல்லை. ஆனால் முக்குவர்களுடன் வாழும் நுளையர்கள் இலக்கியத்திலும் நிகண்டுகளிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றார்கள்.
பெர்மனின் கடைசி கடிதத்தை படிக்கவும்.
11. மொசாம்பிக் முக்குவனா? எவன் அவன்?
12. மொசாம்பிக் நாட்டு ‘முக்குவா’ பாசை:
துறைவனை கவனமாகப்படிக்கவும். இந்த விமரிசனத்தை இரண்டுமூன்று பேர் எழுதியிருப்பதால் இந்த பகுதியை எழுதியவரின் கவனக்குறைவு. துறைவன் குறியீடுகளுடனும் வாசக இடைவெளியுடனும் இருக்கின்றது. ஆனால் நீங்கள் சொல்வது மிகவும் தெளிவாகவே துறைவனில் சொல்லப்பட்டிருக்கின்றது. துறைவனை மீண்டும் படியுங்கள். படிக்காமல் குற்றம்சாட்டாதீர்கள்.
13. ஆதியில் நின்றதும் பாதியில் வந்ததும்:
எது சறுக்கல்? துறைவனை மீண்டும் படிக்கவும்.
துறைவனில் முக்குவர்களின் உண்மையான பெயர் என்னவென்று விவாதிக்கப்படுகின்றது. உங்களின் பெயர் சூசையா? சூசைமிக்கேலா? அல்லது தொபியாஸ் சூசைமிக்கேலா? என்று. இந்த தெளிவுகூட இல்லாமல் முக்குவர்களை வேறு எங்கிருந்தோ பெயர்த்தெடுத்து கப்பலில் கொண்டுவந்ததுபோல் நான் சொல்வதாக நீங்களாகவே உங்களை வருத்துகின்றீர்கள்.
14. எதிர்வினைவுகள்:
தூவார்தே பர்போசா முக்குவப்பெண்களை கேவலமாகச்சொல்லும் வார்த்தைகள் துறைவனில் சொல்லப்பட்டிருக்கின்றன. அதை பொய்யென்று ஆணித்தரமாக நிறுவி தெற்கு மலபார் மீனவர்கள் அரையர்கள் என்று துறைவனில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது.
ஆனால் துறைவனை மேற்கோள்காட்டி முக்குவப்பெண்களை மிகவும் மோசமாகப்பேச வேற்று ஜாதியினருக்கு இது ஒரு வாய்ப்பாகப்போய்விட்டதாம். இது எவ்வளவு பெரிய அபாண்டமான குற்றச்சாட்டு. அவரது யூகத்தை என்மீது பழியாக வைக்கின்றார். அதாவது அவர் பொய்ப்பிரச்சாரம் செய்வார். அதற்கு நான் பொறுப்பு.
வெளிமக்கள் துறைவனின் நம்பகத்தன்மை தெரியாமல் புளகாங்கிதமடைகின்றார்களாம். ஆனால் “முதன் முதலாக முக்குவன் நோகடிக்கப்பட்டிருக்கின்றான்” என்று கோடிட்டுக்காட்டுகின்றீர்கள். அந்த முக்குவன் நீங்களா? நீங்கள் சொல்லவருவது என்னவென்றால் துறைவனை படித்தவர்களையும் அதற்கு விமர்சனம் எழுதியவர்களையும் எழுத்தாளனாகிய நான் ஏமாற்றிவிட்டேன் என்று. இனியும் யாரும் துறைவனை படிக்கத்தேவையில்லை. துறைவனுக்கு மதிப்புரை எழுதிய மூவரும் ஒன்றும் தெரியாத மடையர்கள். விமர்சனம் எழுதுகின்றவர்கள் ஐயோ பாவம்.
10-ம் நூற்றாண்டிலும், 12-ம் நூற்றாண்டிலும் முக்குவருக்கான தடயம் எங்கே இருக்கின்றதையா?
ஐயா பெரியவரே, உங்களுக்கு நான்தான் கிடைத்தேனா? தயவுசெய்து கனவிலிருந்து விழித்தெழுங்கள்.
15. இறுதியாக:
மொத்தத்தில் துவார்தே பர்போசாவால் என்மனம் புண்பட்டதால்தான் நான் துறைவனை எழுதினேன். துறைவன் தொ. சூசைமிக்கேலை புண்படுத்திவிட்டதாக உளறுகின்றார். உண்மையான மீனவர்கள் துறைவனை கொண்டாடுகின்றார்கள். துறைவனை விற்பனை செய்து காசுபார்க்கும் நிலையில் நானில்லை. பத்து லட்சம் செலவுசெய்து துறைவன் வெளியீட்டிற்கு குடும்பத்துடன் வந்திருந்தேன்.
உங்களைப்போன்றவர்களுக்கும் சேர்த்துதான் நான் இரவு தூங்காமல் விழித்திருந்து படித்து எழுதவேண்டியிருக்கின்றது. நான்கு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு, வேலைக்குச்சென்று வந்தபிறகு இரவில் படித்து, உயிரைக்கொடுத்து உண்மையான நெய்தல் இலக்கியம் படைப்பவனை பிரதியெடுப்பு முதல்நிலை நெய்தல் படைப்பாளிகள் விரட்டியடிக்க நினைப்பதில் வியப்பொன்றுமில்லை.
துறைவனில் “சுங்கான்” என்னும் சொற்பதத்தை உபயோகித்திருப்பேன். சுங்கான் ஒரு சிறியமீன். ஆனால் அதன் முள் மிகவும் விஷமானது. சில நேரம் நல்லமீன்களின் கூட்டத்தின் இடையிடையே சுங்கானும் கிடக்கும். நாம் கரைமடியில் கிடக்கும் நெத்திலி போன்ற சிறிய மீன்களை கையினால் வாரியெடுக்கும்போது சுங்கானின் முள் எதிர்பாராவிதமாக நம் கையில் குத்திவிடும். அப்புறம் ஓவென்ற அலறல்தான். இந்த விமர்சனமும் அதைத்தான் காட்டுகின்றது.
என்னை சீண்டிவிட்டதோடன்றி எனக்கு மன உளைச்சலையும் உண்டாக்கிவிட்டு நல்ல பிள்ளைபோல் நான் இன்னும் பல நெய்தல் படைப்புகள் படைக்கவேண்டுமாம். மிகப்பெரிய இலக்கிய கர்த்தாவான அவரே அவரின் எதிர்பார்க்கும் ரசனைக்கும் ஏற்ப செவ்வியல் நெய்தல் காப்பியங்கள் புனையலாமே.
முக்குவன் என்கின்ற சாதிப்பெயர் 16-ம் நூற்றாண்டுக்கு முன் இல்லை என்பதை துறைவன் முக்குவா அதிகாரத்தில் பேசுகின்றது. நீங்கள் எதிர்பார்ப்பதைப்போல் முக்குவன் ஆண்ட ஜாதி என்பதை பேச துறைவன் வரவில்லை. முக்குவன் என்பவன் அரையன். அரையன் மீனவத்தலைவனல்ல மாறாக தென் மலபாரில் அரையன் என்பது ஒரு ஜாதியின் பெயர். இதனால் நீங்கள் ஏமாற்றமடைந்தால் அதற்கு துறைவன் பொறுப்பல்ல. நான் எழுதுவது உங்களைப்போல் விக்கிபீடியாவில் கிடைக்கும் எளிய தரவுகளைக்கொண்டல்ல. என்னுடைய ஆராய்ச்சித்தளம் வேறு.
அனைவருக்கும் அனைத்து நாவலையும் விமர்சிக்கும் உரிமை உண்டு. ஆனால் திரு. தொ. சூசைமிக்கேல் அவர்கள் என்மீதிருக்கும் உரிமையில் எழுதியதாகச்சொல்லிக்கொண்டு விமர்சனம் என்னும் பெயரில் கூர்கத்தியை என் பள்ளையில் குத்திச்சொருகி என்னை கீழே தள்ள முயன்றிருக்கின்றார். விமர்சனம் எழுதலாம், ஆனால் எழுத்தாளனின் குஞ்சாமணியை கொட்டையுடன் பிடுங்கியெடுக்க முற்படக்கூடாது.
நான் யாருக்காக துறைவனை எழுதினேனோ அந்த இலக்கை துறைவன் அடைந்துவிட்டது. என்னுடைய நண்பன் புதிதாக கட்டியிறக்கிய விசைப்படகில் பயன்படுத்தும் வொயர்லெஸ் கருவியின் பெயர் துறைவன். ஏராளம் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் ஓய்விலிருக்கும் நேரத்தில் படிப்பதற்காக துறைவனை வாங்கிச்செல்கின்றார்கள். நான் எதற்காக எழுதினேனோ அந்த இலக்கை துறைவன் அடைந்துவிட்டான். மீனவர்கள் ஆழ்கடலில் இலக்கியமும் படிக்க ஆரம்பித்திருக்கின்றார்கள். இந்த நேரத்திலும் ஆழ்கடலில் “துறைவன்…ஓவர்…துறைவன்…ஓவர்…துறைவன்…” என்று ஒலித்துக்கொண்டிருக்கும்.
திரு. தொ. சூசைமிக்கேல் எழுதியிருக்கும் விமர்சனம் மிகவும் இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியவாதிகள் அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டும்.
துறைவன் எழுதியதிலிருந்து எனக்குக் கிடைத்த முக்கியமான இலக்கியப்பாடம் “தன்னுடைய புத்தகத்திற்கு யாரெல்லாம் மதிப்புரையும் அணிந்துரையும் எழுதவேண்டுமென்பதை தீர்மானிக்கும் உரிமை எழுத்தாளனுக்கு இல்லை.”
நிறைவாக, துறைவன் ஒரு புதினமாக இருந்தாலும் முக்குவர்களின் வரலாற்றாய்வில் ஒரு மைல்கல். துறைவனால் சில்லறை கேரளக்கடற்கரை எழுத்தாளர் யாருக்காவது வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அதற்கு துறைவன் பொறுப்பல்ல.
நன்றி
கிறிஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக